டீசல் மூலம் மின்சார உற்பத்திக்கு ஆதரவு இல்லை – சஜித் அறிவிப்பு
டீசல் மூலம் மின்சார உற்பத்தி செய்வதற்கு தான் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லையென எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அமைச்சர் கஞ்சன விஜேயசேகரவால் மின்சக்தி சட்டமூல திருத்தச்சட்ட மூலம் இன்று (09) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்கட்சித் தலைவரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,10 மெகாவோட்ஸூக்கு குறைந்த உற்பத்தி தளத்துக்கு போட்டித் தன்மையில்லாமல், விலையை தீர்மானிக்க முடியும். எனினும் 10 மெகாவோட்ஸூக்கு அதிகமான உற்பத்தி தளங்கள் அமைக்கப்படும் போது அவற்றுக்கு போட்டித்தன்மை இருக்க வேண்டும்.
எனவே டீசல் மூலமான மின்சார உற்பத்தியை தவிர்த்து புதுப்பிக்கப்பட்ட மின்சக்திக்கு செல்லும் திட்டம் தொடர்பான இந்த யோசனையை ஒரு வாரத்துக்கு பிற்போட்டு, கலந்துரையாடல் மூலம் உரிய தீர்மானத்தை எடுக்கமுடியும்” என்றார்.