இலங்கைக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு தன்னால் முடிந்த அணைத்து முயற்சிகளையும் மேற்க்கொள்வேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டாலினாஜோர்ஜிவாவுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாடியபோது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளேன்.
அதிகாரிகள் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக, கூடிய விரைவில் இலங்கைக்கு பயணம் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” என்றார்.