இலங்கைசெய்திகள்

யாழில் 2 பவுண் சங்கிலியை ஆட்டையப்போட்ட கொள்ளைக்கும்பல்

கல்வியங்காடு கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் 2 பவுண் தங்கச்சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது. வீட்டின் யன்னல் கம்பிகளை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வயோதிபபெண் அணிந்திருந்த 2 பவுண் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button