
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிவந்த 75 வயதுடைய தாயார் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
மூன்று உறவுகளை தேடிவந்த வவுனியா – கிறிஸ்தவகுளம் பகுதியைச்சேர்ந்த தங்கராசா செல்வராணி என்ற தாயாரே மரணமாகியுள்ளார்.
அவரது, மகன் இவரது மகன் தங்கராசா தயாபரன் (41) , மருமகன் தம்பு தியாகராசா (56), பேரன் தியாகராசா மனோகரன் (31) ஆகிய மூவரையுமே தேடிவந்துள்ளார்.


