இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அரிசி விலைகளை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பொலநறுவை அரிசி நிறுவனங்கள்

நாட்டில் தொடர்ச்சியாக பொருட்களின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில், பொலன்நறுவையில் உள்ள பிரதான அரசி வர்த்தகர்கள் மீண்டும் அரிசிகளின் விலைகளை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அரிசி வர்த்தகர்கள் கடந்த வாரம் இரண்டு முறை தமது அரிசி உற்பத்திகளின் விலைகளை அதிகரித்ததாதகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலன்நறுவையின் பிரதான அரிசி நிறுவனமான அரலிய நிறுவனம் வர்த்தகர்களுக்கு வெளியிட்டுள்ள விலை பட்டியலில் கடந்த 12 ஆம் திகதி விற்பனை செய்த ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 180 ரூபாவில் இருந்து கடந்த 22 ஆம் திகதி முதல் 205 ரூபாவாக அதிகரித்துள்ளது.

75 ரூபாவுக்கு விற்பனை செய்த ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது. 175 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசியின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

180 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சிகப்பு பச்சை அரிசியின் விலை 205 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரிசி விலை கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியதன் காரணமாக அரிசி விலைகளை அரிசி ஆலை உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு அதிகரித்து வருகின்றனர் என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button