இளைஞர் சோசலிச முன்னணியால் கொழும்பில் இன்று (18) பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் எரிபொருள் வரிசையை முடிவுக்கு கொண்டு வருவோம் எனும் தொனிப்பொருளில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
தொழிநுட்பக் கல்லூரி சந்தி முதல் காலிமுகத்திடல் வரை பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் உள்நுழைய முற்பட்ட நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.