இலங்கைசெய்திகள்

கொரோனா தடுப்பூசி அட்டை இருப்பவர்களே கச்சதீவுக்கு செல்லலாம்

வரலாற்று பிரசித்தி பெற்ற கச்சதீவு வருடாந்த திருவிழா பற்றிய கலந்துரையாடல் யாழ.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இன்று (28) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 11ஆம், 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

கொரோனாத் தொற்றுக் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருவிழாவில் கலந்துகொள்பவர்கள் கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டுடியது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில், இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராம் மகேஷ், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜோசப் ஜெபரட்ணம் அடிகளார், யாழ்.மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், நெடுந்தீவு, ஊர்காவற்துறை பிரதேச சபை செயலர்கள், கடற்படை உயராதிகரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button