இலங்கைசெய்திகள்

பயங்கரவாத திருத்தச்சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் இன்று (10) நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் சமர்ப்பிக்கப்பட்டது.

திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (11) இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்
“ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான உறுதிமொழிகள் சட்டமூலத்தில் பரிசீலிக்கப்படுமா?” என அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
“பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என நீதியமைச்சர் தெரிவித்திருந்ததை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஏன் இந்த சட்டமூலத்தை முன்வைத்தார்” என கேள்வி எழுப்பினார்.

கேள்விகள் எழுப்பப்பட்டபோதும் ​​சட்டமூலத்தை முதலில் சமர்ப்பித்து பின்னர் விவாதிப்பதே நடைமுறை என அமைச்சர் பீரிஸ் பதிலளித்தார்.

சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்படும்போது விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றும் சபையின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவே இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button