நாட்டில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் தலைமறவாகியிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று (18) நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
ஆளுங்கட்சி முன்வரிசையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடுத்ததாக மஹிந்தராஜ பக்சவிற்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாமலுக்கு இரண்டாவது வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.