நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர் இன்னும் தலைமைப்பதவியில் உள்ளார். நிவாரணத்தைப் பெறுவதற்காகவே ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேறகண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டபாயவின் ஜனாதிபதி விஞ்ஞாபனம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு லெபனனாக மாறும் என மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தாக சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களை பதவி விலகுமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான பொறுப்பையேற்று முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.
அந்த அரசாங்கத்திற்கு தலைவரான ஜனாதிபதியும் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் அவர் இதுவரை செய்யாது இடைக்கால நிவாரணத்தைப் பெறுவதற்காகவே ரணிலை பிரதமராக நியமித்துள்ளார்” என்றார்.