தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொலைப் போராளியான பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று
(05) மட்டக்களப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நினைவேந்தல் நிகழ்வுக்கு வந்த வவுணதீவு பொலிஸார் நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டதுடன், கலந்து கொண்டவர்களை புகைப்படமும் எடுத்தனர். இதனால் அப்பகுதியில சிலமணி நேரம் பதற்றமான நிலைமை நிலவியது.
விடுதலைப்புலிகளின் உறுப்பினர் நினைவு கூரப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் சிலரும் பொலிஸாருடன் வாய்த்தக்கர்த்தில் ஈடுபட்டனர்
தியாகி சிவகுமாரன் எந்த விடுதலை இயக்கத்தினை சேர்ந்தவரும் இல்லையெனவும் அவர் மாணவர் ஒன்றிய தலைவராகச் செயற்பட்டு தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர் எனவும் இதன்போது பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.
யாழில் இறந்தவரை இங்கு ஏன் நினைவு கூறுகின்றீர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது தாம் தனியொரு கட்சியெனவும் உயிரிழந்த ஒருவரை நினைவுகூரும் உரிமையுள்ளது எனவும் அதனை யாரும் தடுக்கமுடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.