இலங்கைசமீபத்திய செய்திகள்

குரங்கு காய்ச்சல் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை

உலக நாடுகளில் அதிவேகமாக பரவிவரும் குரங்கு காய்ச்சல் இலங்கைக்குள் பரவுவதை தடுக்கும் நோக்கில் பல செயற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து குரங்கு காய்ச்சலுடன் வருபவர்களை இனங்காண்பதற்கு விமான நிலையத்தில் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு்ள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குரங்கு காய்ச்சலுடன் வருபவர்களை விமான நிலையத்தில் இனங்கண்டு அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்படுவதாக தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் பிரதானியான வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

குரங்கு காய்ச்சல் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகும் வேளையில் இலகுவாக பரவக்கூடியது என விஞ்ஞானப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button