காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக 24ஆவது நாளாக இடம்பெற்றுவரும் “கோட்டா கோம்” போராட்டத்தை அண்டிய பகுதியில் ஏராளமான கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டபாய அரசாங்கத்தை பதவிவிலக கோரி மக்கள் முன்னெடுத்துவரும் தன்னெழுச்சிப் போராட்டம் இன்றும் (02) இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில், அப்பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மத்தியில் அச்சநிலையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.