தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிபேரலையின் போதே இறந்து விட்டதாகவும், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் காண்பித்த பிரபாகரனின் புகைப்படம் பொய் எனக் குறிப்பிட்டு பதாகையை ஏந்தியவாறு ஒருவர் காலிமுகத்திடலில் இன்று (24) போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியாளர்களைக் குறிப்பிட்டு திருடர்கள் ஹீரோ ஆக முடியாது , ஹீரோக்கள் திருடர்களாக இருக்க மாட்டார்கள் எனக்குறித்த போராட்டகாரர் தாங்கியுள்ள பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.