எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக்யைக் கண்டித்தும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு இன்று (10) மாட்டுவண்டிகளில் சென்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் க.விஜிந்தன், உப தவிசாளர் ம.தொம்மைப்பிள்ளை, உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், தி.இரவீந்திரன், இ.கவாஸ்கர், க.தவராசா, இ.கஜீதரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான இ.ஜெகதீசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களான த.அமலன், மோ.விக்கினா ஆகியோர் இவ்வாறு மாட்டுவண்டிகளில் சபை அமர்வுக்குச் சென்றனர்.