இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

பின்தங்கிய குடும்பம் ஒன்றிற்கு 60 லட்சம் நிதிச் செலவில் அழகிய வீடு

மட்டுவில் தெற்கு கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் ஒன்றிற்கு 60 லட்சத்திற்கு மேற்பட்ட நிதிச் செலவில்  அழகிய வீடு ஒன்றை அமைத்து  பெறுமதியான வீட்டு தளபாடங்களையும் அவர்களது உறவினர்கள் 21/10/2021 வியாழக்கிழமை கையளித்துள்ளனர்

உறவினர்களான யோகேந்திரன் இந்தி, சின்னத்தம்பி ராசமணி தம்பதிகளும் பிள்ளைகளும், சதாசிவம் ரஞ்சி சகோதரர்களும் பிள்ளைகளும் இணைந்து  இக்கிராமத்தில் வசிக்கும் நாகேந்திரன் நிசாந்தி என்ற குடும்பத்திற்கு கட்டி கொடுத்து சமூகத்திற்கு முன்மாதிரியாக செயற்பட்டுள்ளனர்

சொந்த சகோதரர்களுக்கே உதவி செய்ய விருப்பம் இன்றிய பலவெளிநாட்டு உள்ளங்களின் மத்தியில் மட்டுவில் கிராமத்தில் வசிக்கும் இந்த உதவிய உறவினர்கள் சமூக ஆர்வலர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்

Related Articles

Leave a Reply

Back to top button