வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி – மூளாய் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (05) தங்க நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்றையதினம் இடம் பெற்ற யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தவேளை நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.