அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்குமாறு பிரதமர் ரணில் விடுத்த கோரிக்கையை பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே, விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் மறுத்துள்ளனர்.
பிரதமராக ரணில் பதவியேற்றதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு அமைச்சுபதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த மூவரும் அமைச்சுப் பதவிகளை ஏற்க மறுத்துள்ளனர்.