இலங்கைசமீபத்திய செய்திகள்
கட்சியில் இருந்து வெளியேறவில்லை ஹரீன் மறுப்பு
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தான் வெளியேறியதாக வந்த செய்தியை ஹரீன் பெர்ணான்டோ அடியோடு மறுத்துள்ளார்.
இவ்விடயத்தை காணொளி ஒன்றை வெளியீட்டு அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவோ அல்லது அநுரகுமார திசாநாயக்கவோ பிரதமர் பதவியைப் பொறுப்பேற்று நாட்டை நிர்வகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இவ்விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தி செய்யவில்லை என்றால் மாத்திரமே நான் சுயாதீனமாக இயங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார். தான் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஹரீன் எம்.பி. இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.