“நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராடிவருகின்றனர். கோட்டபாய அரசாங்கம் மக்களை அச்சுறுத்துகின்றது. இந்த அரசாங்கம் மனிதர்களை படுகொலைசெய்யும் அரசாங்கம்” என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேதமதாஸ நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரம்புக்கனையில் போராட்டம் மேற்க்கொண்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்க்கொள்ள அனுமதிவழங்கியது யார்? இச்சம்பவம் தொடர்பில் உடன் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும்.
ரம்புக்கனை சம்பவத்தை முழுமையாக விசாரிக்குமாறு பொலிஸ்மா அதிபர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஓய்வுபெற்ற நீதியரசர்களை கொண்டு முழுமையான விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போதும் அங்கிருந்த பஸ் மீதும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களே தீ வைத்தனர்” என்றார்.