விளையாட்டு

குறிஞ்சிக்குமரன் – அரியாலை ஐக்கியம் அசத்தல் ஆட்டம்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் போட்டிகளில் இன்று (08) இடம்பெற்ற ஆட்டங்களில் குப்பிளான் குறிஞ்சிக்குமரன் மற்றும் அரியாலை ஐக்கிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

முதலாவது போட்டியில் புத்தூர் வீனஸ் வி.கழகத்தை எதிர்த்து குப்பிளான் குறிஞ்சிக்குமரன் வி.கழகம் மோதியது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காது மிகவும் விறுவிறுப்பாக மோதிக் கொண்டன.

இரு அணிகளும் கோல்களைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், வெற்றி தோல்வியை தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதையில் குப்பிளான் குறிஞ்சிக்குமரன் வி.கழகம் வெற்றியை தனதாக்கி கொண்டது.

இரண்டாவது போட்டியில் அரியாலை ஐக்கிய வி.கழகமும் உரும்பிராய் உதயசூரியன் வி.கழகமும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் அரியாலை ஐக்கியம் 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related Articles

Leave a Reply

Back to top button