இலங்கைசமீபத்திய செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம்

யாழில் இன்று ஆரம்பம்

கட்சித்தலைவர்கள் பங்கேற்பு

இலங்கையில் உள்ள காட்டுமிரண்டித்தனமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி ஊர்தி வழியாக நாடளாவிய ரீதியில் கையெழுத்துப்பெறும் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய முன்றலில் தேங்காய் உடைக்கப்பட்டு காங்கேசன்துறையில் ஊர்தி வழிப்போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் இந்தக் கையெழுத்துத் திரட்டும் ஆரம்ப நிகழ்வில் பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அந்த வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் (தலைவர் – புளொட்), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈ.பி.ஆர்.எல்.எப்) , வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் , இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி. சேயோன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button