இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களை தவறாக வழிப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்
-தமிழ் ஆதரவாளர்கள் விசனம்

JVP என அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு நேற்று
யாழ்.நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் தமிழரசு கட்சி தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, வடமாகான அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட இன்னும் சிலர் பங்கு கொண்டமை தமிழ் ஆதரவாளர்களை கடுமையான கோபத்திற்குள் உள்ளாக்கியுள்ளது.

தெற்கை மையப்படுத்தி இயங்கிய jvp
வடமாகாணத்தில் எந்த உறவும் இன்றி , தமிழர்களுக்குள் குறிப்பாக தமிழ் கட்சிகளுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் வடமாகாணத்தில் மிக அண்மையில் தன்னிச்சையாக கால் பதித்து எந்த வித செயற்பாடுகளும் இன்றி
சந்திரசேகரனின் வெறும் ஊடக சந்திப்புகளுடனேயே செயற்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

தமிழ் தேசிய கட்சிகளான TNA, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகளுக்குடையில் ஒற்றுமை ஏற்படவேண்டும் எனவும் அதற்கு பரஸ்பரம் இரு கட்சிகளும் குறைந்தது தமிழர் பிரச்சினையில் ஒரே நேர்கோட்டில் பயனிக்க வேண்டும் என மக்கள் எதிரபாரத்துள்ள இக் காலகட்டத்தில் இந்த ஜே.வி.பியின் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் விருந்தினராக பங்குபற்றியமை
இக்கட்சியை வடமாகாண மக்கள் அங்கீகரித்து விட்டது
போன்ற கருத்தை சாதாரன மக்களுக்கு உணரத்தியுள்ளது .

அதாவது கூட்டமைப்பின் ஆதரவுடனே அக்கட்சி இயங்குவது போன்ற உணர்வை
தமிழ் மக்களுக்கு உணர்த்துகின்றது .இது தமிழ் தேசிய பார்வையில் ஒரு தவறான முன் உதாரணமாகும் .

இது கூட்டமைப்பின் வாக்கு வங்கியை மேலும் சரிக்கவே வழிகோலும். தமிழ் கட்சிகள் பல்வேறு பிரிவகளாக உடைந்துள்ள இத்தருனத்தில்
கூட்டமைப்பின் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் அதை நிமித்த கடமையாற்றாமல்
இவ்வாறு தெற்கு உதிரி கட்சிகளை ஊக்குவிப்பதன் காரணம் என மக்கள் கேட்டு
விமர்சனம் செய்கின்றனர் .

குறிப்பாக இவ்வாறான முன் உதாரணங்களை தவிர்ப்பது
தமிழ் தேசிய கட்சிகளின் வளர்சிக்கும் தமிழ் மக்களின்
ஒருமித்த பேரம் பேசும் சக்திக்கும் அவசியம் என்பதை
தமிழ் ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வேறு சில தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும்
அதனை அவர்கள தவிர்த்து இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button