சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்குள் உள்நுழைய முற்பட்ட இலங்கையர்கள் 15 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
மீன்பிடி இழுவைப்படகொன்றில் அவுஸ்ரேலியா சென்றுள்ளனர். அவர்கள் சென்ற படகு அவுஸ்ரேலியக் கடற்கரையில் பழுதடைந்தது. இந்நிலையில், அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பு படையினாரால் கைது செய்யப்பட்டனர்.
அவுஸ்ரேலியாவில் இருந்து விசேட விமானத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.