“புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினரும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதயகம்மன்பில தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து ஆசிபெற்ற பின்னர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வக்கட்சி மாநாட்டை எதிர்கட்சிகள் புறக்கணித்தபோதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றதில் உள்நோக்கம் இருக்கின்றது. தற்போதைய அரசாங்கத்தின் நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைவதற்கு கூட்டமைப்பினர் முற்படுகின்றனர். அதாவது புலிகளால் ஆயுதம் மூலம் பெறமுடியாமல் போனதை, கூட்டமைப்பினர் அரசியல் ஆயுதம் மூலம் பெற முயற்சிக்கின்றனர்” என்றார்.