13 வயதுடைய மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர் நேற்று (20) பாக்குநீரிணையக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
மும்பையச்சேர்ந்த ஜியாராய் என்ற சிறுமி வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தும் இந்தச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கை, இந்திய நாடுகளின் அனுமதியுடன் தலைமன்னாரில் இருந்து அதிகாலை 4.22 க்கு நீந்த ஆரம்பித்த சிறுமி மாலை 5.32 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந்தார்.
29 கிலோ மீற்றர் தூரத்தை 13 மணித்தியாலம் 10 நிமிடத்தில் கடந்து சாதனைபடைத்துள்ளார்.