இலங்கைசெய்திகள்

தமிழக மீனவர்களின் மீன்பிடி  படகுகளை  இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

தமிழக கடற்கரை மாவட்டங்களான நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்த நிலையில் இலங்கை அரசால் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 125  மீன்பிடி படகுகள் மற்றும் 17 நாட்டுபடகு  காரை நகர், காங்கேசன்துறை, மயிலட்டி, தலைமன்னார்  உள்ளிட்ட கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு வசமுள்ள தமிழக மீன்பிடி படகுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசின் இச் செயற்பாடு தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது.

இந்நிலையில், ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் இன்று (24) ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

தமிழக மீனவர்களின் 105 படகுகள் இலங்கையில் ஏலம் விடப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள படகுகளுக்கு  மாநில அரசு நிவாரணம் வழங்குவது போல் மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மீனவர்கள் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மீனவர்களின்  கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் 2 ஆம் திகதி இந்திய அரசு ஆவணங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்து வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button