தேசிய சேமிப்பு வங்கியின் பொன்விழாவை முன்னீட்டு விவசாயப் பயிர்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சி இன்று (12) காலை பருத்தித்துறையில் இடம்பெற்றது.
பருத்தித்துறையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை கிளையின் முகாமையாளர் அப்புத்துரை கெங்காதரன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனிளிகளுக்கு சேதன பசளை, மரக்கன்றுகள் மற்றும் விதைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தேசிய சேமிப்பு வங்கியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிரதான தகவல் அதிகாரி பொது முகாமையாளர் கலாநிதி. ஏ.கே.எல்.இளேசிங்க கலந்து சிறப்பித்தார்.