இலங்கைசெய்திகள்

யாழ். திருநெல்வேலியிலும் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தடைசெய்யக்கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் கையெழுத்துப் போராட்டம் இன்று (27) திருநெல்வேலியில் நடைபெற்றது.

திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு முன்பாக காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button