![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/Screenshot_20220222_114845-748x1024.jpg?resize=708%2C969&ssl=1)
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவரான ஜுலி ஜே.சன்ங் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்க பயிற்சி பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை, அவர் தனது ரூவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் “சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்வது தகவல் தொடர்புக்கு மாத்திரமல்ல நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கற்பதற்கும் உதவும்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
“எனது உச்சரிப்பு சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்” என மூன்று மொழிகளிலம் அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.