
நாளை இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உறுதிபடுத்தியுள்ளார்.
ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.