நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தாக்கப்பட்ட இரண்டாவது வழக்கிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதிகளால் மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.