சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மீண்டும் இன்று (06) முதல் டீசல் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று முதல் 800 மெட்றிக் டொன் டீசல் விநியோகிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இத்தொகை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.