இலங்கைசமீபத்திய செய்திகள்
பிரதிசபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழிவு
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (17) ஆரம்பமான நிலையில் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக ரோஹினி கவிரத்னவின் பெயரை கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.
பெரமுனவின் சார்பாக அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்ததுடன், பண்டார பிரேரணையை வழிமொழிந்தார்.