இலங்கைசெய்திகள்

மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – இராணுவத்தளபதி

நாட்டையும், மக்களையும், பொதுச்சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு முப்படையினரையும் களத்தில் இறக்கியுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

படையினரின் சேவைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தேவையில்லமால் வீட்டை விட்டு எவரும் வெளியே வரவேண்டாம் எனவும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நிலைநாட்ட அதிகளவான முப்படையினர் நாடுபூராகவும் இறக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button