இலங்கைசெய்திகள்

மக்களுக்காக தியாகம் செய்யத்தயார் – மஹிந்த

நாட்டு மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

மஹிந்தராஜ பக்ச பிரதமர் பதவியில் இருந்து விலககூடாது எனத்தெரிவித்து, மஹிந்தவின் ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மத்தியில் உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சவால்களை கண்டு ஓடி ஒழியக்கூடாது. அரசியலுக்காக சிலர் மேற்க்கொள்ளும் திட்டங்களுக்கமைய செயற்படமுடியாது. இடைக்கால அரசாங்கத்திற்கான ஏற்பாட்டை ஜனாதிபதி செய்யலாம். அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க நான் தயார். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயார். ஆனால், 69 இலட்ச மக்களின் ஆணையை மீறும் எந்த செயலுக்கும் எங்களால் உடன்படமுடியாது.” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button