அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற விபத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (13) அராலி யில் முன்னெடுக்கப்பட்டது.
அராலி மத்தி அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து அராலி சமுர்த்தி வங்கி வரை பேரணியாக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள், விபத்துக்களை தவிர்ப்போம் உயிர்களை காப்போம்!, அழிக்காதே அழிக்காதே உயிர்களை அழிக்காதே!, வேண்டாம் வேண்டாம் அதிவேகம வேண்டாம்!, கண்ணீரின் வலியறிந்தும் கவனயீனம் தொடர்வது ஏன்!, மதுபோதையில் வாகனம் ஓடுவதை முற்றாக தவிர்ப்போம்!, பயன்தரும் பயிரை முளையிலே கிள்ளி எறிந்தது ஏன்! போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இப்போராட்டத்தில் அராலி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.