சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று (08) மேற்க்கொண்டிருந்தனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இரண்டு வாரத்திற்குத் தேவையான மருந்துகளே கையிருப்பில் இருப்பதாகவும், அதன் பின்னர் வைத்தியசாலையை கொண்டு நடத்த முடியாத நிலைமை உள்ளதாகவும் தெரிவித்தே போராட்டத்தை மேற்க்கொண்டிருந்தனர்.
அத்துடன் சில மருந்து வகைகள் வைத்தியசாலையில் இல்லை எனவும் தெரிவித்தனர். உடனடியாக இப்பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தீர்வினை பெற்றுத்தர வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.