நாட்டில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு உலகநாடுகளிடம் இலங்கை அரசு கடன்கோரி வருகின்றது.
அவ்வகையில், அத்தியாவசாயப் பொருட்களான பால்மா, பருப்பு, உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக அவுஸ்ரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கோரப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் மேற்குறித்த கோரிக்கை கோரப்பட்டுள்ளது.