இலங்கையில் கடந்த வருடம் (2021) கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பிடித்தமைக்கான சான்றிதழ் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி கஹாவத்தை பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட குறித்த இரத்தினக்கல்லின் மொத்தநிறை 510 கிலோ கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.