இலங்கைசமீபத்திய செய்திகள்
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று (18) தெரிவித்துள்ளார்.
அதன் படி ஒரு கிலோ கிராம் பருப்பு 695 ரூபாயிலிருந்து 398 ரூபாவாக குறைவடைந்துள்ளது. ஒரு கிலோகிராம் நாடு அரிசி 220 ரூபாயிலிருந்து 160 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சையரிசி 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சீனியின் விலை 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும்
விலை குறைக்கப்பட்டுள்ளது.