பட்லர் வானவேடிக்கை காட்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் இறுதிப்போட்டிக்கு நுழைந்தது
இந்திய பிறிமீயர் லீக் (IPL) சுற்றுப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் ரோயல்ஸ் அணியை வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் களத்தடுப்புக்காக களமிறங்கியது. இதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல்ஸ் 20 பந்து பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் பெங்களூர் ரோயல்ஸ் அணியின் எதிர்பார்த்த வீரர்கள் ஏமாற்றம் அழித்தனர். விராட் இந்த ஆட்டத்திலும் ஏமாற்றம் அழித்தார். பெப் டு பிளெசிஸ், கிளேன் மெக்ஸ்வேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் பிரகாசிக்கவில்லை.
ரஜட் பட்டிதார் 42 பந்துகளுக்கு 58 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்காக பெற்றுக்கொடுத்தார். பெப் டு பிளெசிஸ் 25 ஓட்டங்களையும், கிளேன் மெக்ஸ்வேல் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் சார்பாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ஒபெட் மெக்கோய் ஆகியோர் தலா 3 இலக்குகளை வீழ்த்தினர்.
158 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் பட்லரின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க 18.1 பந்து பரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் சார்பாக ஜோஸ் பட்லர் அதிரடி காட்டினார். இறுதி வரை ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களைப் அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார். சஞ்சு சம்சன் 23 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஜோஸ் ஹெஷல்வூட் 2 இலக்குகளையும் வனிந்து ஹஸரங்க ஒரு இலக்கினையும் வீழ்த்தினார்.
இப்போட்டாயில் வெற்றி பெற்றதன் மூலம் IPL 2022 இன் இறுதிப்போட்டிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் தகுதிபெற்றது.