நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் ஒருவேளை உணவுபெறுவதிலேயே பல பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
அவ்வகையில், அரிசி ஒரு கிலோகிராம் 200 ரூபாவிற்கு மேற்பட்ட விலைகளில்,வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசாங்கம் சதொச விற்பனை நிலையம் மூலம் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வகையில், சதொசாவில் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 110 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் அரிசியைப்பெற்றுக் கொள்வதற்கு சதொச விற்பனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அவ்வகையில், ஞாயிற்றுக்கிழமையிலும் அச்சுவேலி சதொச விற்பனை நிலையத்தில் அரிசியை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை எமது இணையத்தள செய்தியாளரின் கமராவில்
பதிவாகியது.