இலங்கைவிளையாட்டு

வடக்கின் போர் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்தியகல்லூரிக்கும் மற்றும் யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டச்சமர் நேற்று (21) யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

நாணயச்சூழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்தியகல்லூரி அணித்தலைவர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரி முதல் இனிங்ஸில் 167 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

சச்சின் – கரிசன் ஜோடி சிறப்பான ஆரம்ப அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. இந்த ஜோடி 27 பந்துபரிமாற்றங்கள் நிலைத்திருந்து மத்திய கல்லூரியின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

இந்நிலையில், முதலாவது இலக்காக 41 ஓட்டங்களைப் பெற்றிருந்த கரிசன் வீழ்த்தப்பட்டார். கரிசன் மூன்று நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டத்துடன் 41 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் பவிலியின் திரும்பினார்.

அடுத்து, சச்சினுடன் ஜேசியல் ஜோடி சேர்ந்தார். எனினும் இந்த ஜோடியால் அதிக நேரங்கள் தாக்குபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 20 ஓட்டங்களைப் பெற்றிருந்த சச்சின் இலக்கு வீழ்த்தப்பட்ட நிலையில் வெளியேறினார்.

ஜெசியல் 16 ஓட்டங்கள் மற்றும் சுகேதன் 11 ஓட்டங்களுடன் பவிலியன் திரும்பினர். சபேசன், ஆஷ்நாத், கிரேம் ஸ்மித் ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் பெறாதநிலையில் இலக்கினை இழந்து திரும்பினர்.

இந்நிலையில்,எட்டாவது இலக்குகாக களமிறங்கிய அபிஷேக் அதிரடிகாட்டத் தொடங்கினார். அபிஷேக் 52 பந்துகளை எதிர்கொண்டு மூன்று நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டங்களுடன் 40 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் பவிலியன் திரும்பினர்.

84.1 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 187 ஓட்டங்களை சென்ஜோன்ஸ் கல்லூரி பெற்றுக்கொண்டது.

மத்தியகல்லூரியின் பந்துவீச்சில், விதுசன் மற்றும் கவிதர்சன் ஆகியோர் மூன்று தலா இலக்குகளை வீழ்த்தினர். அத்துடன், நியூட்டன், கெளதம் ஆகியோர் தலா ஒரு இலக்கினை வீழ்த்தினர்.

பதிலுக்கு தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்.மத்திய கல்லூரி 6 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் முதல்நாள் நேர ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button