பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமானது என சுகாதார அமைச்சு மீண்டும் அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணியத் தேவையில்லையென சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
எனினும் குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து முகக்கவசம் அணிவது கட்டாயமானது என சுகாரார அமைச்சு மீண்டும் அறிவித்துள்ளது.