இலங்கைசெய்திகள்

பாழடைந்த கிணற்றில் மீன்பிடித்த சிறுவன் தவறிவீழ்ந்து பலி

மீன்பிடிக்க கிணற்றில் தூண்டில் விட்ட சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மதுராநகர் பகுதியிலேயே இத்துயரச் சம்வவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 10 வயதுடைய கனகசுந்தரம் கம்சன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

ஆடுமேய்பதற்காக சென்ற சிறுவன் பாழடைந்த கிணற்றுக்குள் மீன்பிடிப்பதற்கு தூண்டில் விட்டபோதே தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மகனைக்காணவில்லை என தந்தை தேடிச்சென்றபோதே சிறுவன் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடைந்தமையினை அவதானித்த தந்தை அயலவர்களின் உதவியுடன் மகனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்போதும், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் சிதம்பரபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button