நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளில் இருந்து மீள வேண்டுமானால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போதுள்ள அமைச்சரவையை கலைத்துவிட்டு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் பேச்சு நடத்தி, பொது இணக்கப்பாட்டுடன் இடைக்கால அரசொன்றை அமைக்கவும். இது தேசிய அரசாக அமையாது.
நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டு, நாடு சாதாரண நிலைக்கு வந்ததன் பின்னர் பொதுத்தேர்தலை நடத்தலாம் அதுவரை இடைக்கால அரசு வேண்டும். ” – என்றார்.