சாவகச்சேரி தனங்கிளப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் 2021 ஆம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் போட்டோ பிரதி இயந்திரம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு பாடசாலை நிர்வாகத்திடம் போட்டோ பிரதி இயந்திரத்தை வழங்கி வைத்தனர்.