
நாட்டில் தொடர்ச்சியாக பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், தைத்த ஆடைகளின் விலையும் 40வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற மின்சாரநெருக்கடி, டொலர் பிரச்சனை மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்கள் காரணமாகவே ஆடைகளின் விலை அதிகரிப்பை மேற்க்கொள்ள வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஸ குமார தெரிவித்துள்ளார்.