நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சனையை அடுத்து இந்தியாவிடம் 1000 கோடி டொலரை கடனாகப்பெறுவதற்கு இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச்செலாவணியை குறைக்கும் முகமாக சீனாவிடம் மீண்டும் இலங்கை கடன்கோரியுள்ளதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.
கடன் கொடுப்பனவுகளை தாமதப்படுத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் ஏற்பாடுகளுக்காக மேலதிக நிதி என்ற உதவி அடிப்படையிலே இலங்கை சீனாவிடம் மீண்டும் கடன் கோரியுள்ளது.
இலங்கை இந்த ஆண்டு சீனாவின்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை கடன் தவணையாக செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.